/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உபரிநீர் செல்ல கால்வாய் அமைக்க மக்கள் எதிர்ப்பு
/
உபரிநீர் செல்ல கால்வாய் அமைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 17, 2024 04:47 AM
தாரமங்கலம்: மேட்டூர் காவிரி உபரிநீர் மூலம், 100 ஏரிகளை நிரப்பும் திட்-டத்தில், 10 வது ஏரியாக தாரமங்கலம் ஏரி நிரம்பும். ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர், அடுத்த ஏரியான குருக்குப்பட்டி ஏரிக்கு செல்ல, கால்வாய் துார்வாரும் பணி பொதுப்பணி உதவி பொறி-யாளர் ரஞ்சிதா, வருவாய் துறையினர் செய்து வந்தனர்.
இதில் தற்போது வேடப்பட்டி சாலையில், டி.எம்.பி., வங்கி எதிரே கால்வாய் துார்வார அதிகாரிகள் நேற்று வந்தனர். அப்-போது அப்பகுதி மக்கள், ஓடை பிள்ளையார் கோவில் பகுதியில் ராஜவாய்கால் உள்ளது. அந்த கால்வாய் துார்வாராமல், இங்கு கால்வாய் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை-யிட்டனர். தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், மக்களிடம் பேசி, குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறியதை தெரிவித்தார். அதனால் மக்கள் சமாதானம் அடைந்தனர்.

