ADDED : மார் 05, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த சிறுமி, காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறை நாட்களில் உறவினர் வீடுகளில் தங்கி உள்ளார். அண்மையில் உறவினர் வீட்டுக்கு செல்ல அச்சமாக இருப்பதாக, பள்ளியில் தெரிவித்துள்ளார்.
விசாரித்தபோது, 2 பேர் தவறாக நடந்து கொண்டது தெரிந்தது. உடனே குழந்தைகள் உதவி எண்ணில் புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகள் நல அலுவலர் விசாரித்தார்.தொடர்ந்து ஓமலுார் மகளிர் போலீசார், கடந்த பிப்., 13ல், சேலம், பனங்காட்டை சேர்ந்த, சிறுமியின், 45 வயதுடைய பெரியப்பா, அண்ணன் உறவுமுறையை சேர்ந்த, 20 வயது வாலிபர் மீது 'போக்சோ' வழக்குப்பதிந்தனர். நேற்று பெரியப்பாவை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடுகின்றனர்.