/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரிகளில் மண் அள்ள தடை பேனர் வைத்து எச்சரிக்கை
/
ஏரிகளில் மண் அள்ள தடை பேனர் வைத்து எச்சரிக்கை
ADDED : ஆக 08, 2024 12:42 AM
மகுடஞ்சாவடி:சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, சொரியம்பட்டி ஏரியில் கடந்த, 25ல் லாரிகளில் மண் அள்ளி, அதை ஒரு லோடு 8,000 ரூபாய் வரை விற்பதாக, மகுடஞ்சாவடி ஊராட்சி தலைவர் மேகலா குற்றம்சாட்டினார். இதையடுத்து சொரியம்பட்டி, நம்பியாம்பட்டி, கஸ்பாபட்டி, பாட்டப்பன் நகர் ஆகிய ஏரிகளில் விதிகளை பின்பற்றாமல், 15 அடி ஆழத்துக்கு மண் அள்ளியதால் ஊராட்சி நிர்வாகம் சார்பில், மேற்கண்ட ஏரிகளில் மண் அள்ள தடை விதித்துள்ளது. மீறினால் வாகனம் சிறைபிடிக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகுடஞ்சாவடி பி.டி.ஓ., செந்தில்முருகன் கூறியதாவது:
மகுடஞ்சாவடி ஒன்றியத்தில், 37 ஏரி, குட்டைகளில் அரசு விதிகளை பின்பற்றி மண் அள்ள அனுமதி கொடுத்தோம். ஆனால் விதிகளை பின்பற்றுவது இல்லை. நேற்று காலை, 10:00 மணிக்கு சிலர் மண் அள்ளினர். போலீசார் செல்வதற்குள் தப்பி ஓடிவிட்டனர். பேனர் வைத்த ஏரிகளில் இனி மண் அள்ளினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.