ADDED : ஏப் 17, 2024 12:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலக வளாகம் முழுதும் ஊர்வலம் சென்றது. இதில் செவித்திறன், பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுடன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையடுத்து அனைவரும் ஓட்டுப்போட்டு, ஜனநாயக கடைமையை நிறைவேற்றும்படி, 'சைகை' மொழியில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

