/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
ADDED : மார் 03, 2025 07:39 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, வரும், 25 வரை நடக்கிறது. இதற்கான ஆயத்த பணியை, மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை செய்துள்ளது.
இதுகுறித்து கல்வி அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3, 6, 11, 14, 18, 21, 25ல் நடக்கிறது. 20,206 மாணவர், 17,732 மாணவியர் என, 37,938 பேர் எழுதுகின்றனர். காலை, 9:45 மணிக்கு தேர்வறைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். 10:15 முதல், மதியம், 1:15 மணி வரை தேர்வு நடக்கும். மைய வளாகத்தில் மொபைல்போன் எடுத்து வர தடை செய்யப்பட்டு உள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், தேர்வறையில் மொபைல் போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், குற்றங்களுக்கு தக்கபடி தண்டனைகள் வழங்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்வதோடு, அங்கீகாரமும் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். அதேபோல் பிளஸ் 1 தேர்வு வரும், 5ல் தொடங்கி, 27ல் முடியும். 39,657 பேர் எழுத உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.