/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார்'
/
'ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார்'
'ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார்'
'ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார்'
ADDED : மார் 31, 2024 04:28 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டையில் உள்ள கணேஷ் கலை அறிவியல் கல்லுாரியில், சேலம் லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தேர்தல் பொது பார்வையாளர் பாட்டீல் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சேலம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையங்களுக்கு தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் அனுப்பப்படும். அந்த இயந்திரங்கள், 6 சட்டசபை தொகுதிக்குரியது, தனித்தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ள அறையில் மூடி முத்திரையிடப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் அந்தந்த அறையின் வெளிப்புறத்திலும், இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் உள்ளேயும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
சின்னம் பொருத்தும் பணியின்போது முகவர்கள், வேட்பாளர்கள் அல்லது அவரை சார்ந்தவர்கள் முன்னிலையில் நடக்கும். அதற்கான போதிய இடவசதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், ஆர்.டி.ஓ., அம்பாயிரநாதன், அலுவலர்கள் பங்கேற்றனர்.

