/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குதிரைக்குத்தி பள்ளத்தில் போலீஸ் பாதுகாப்பு
/
குதிரைக்குத்தி பள்ளத்தில் போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஆக 07, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காடையாம்பட்டி, ஓமலுார் அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் பைக்குகளில் குதிரைக்குத்திபள்ளம் சென்று அங்குள்ள இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக, 4 பேர் கைது செய்யபட்டு விசாரணை நடக்கிறது. மோதலை தொடர்ந்து, இரண்டாம் நாளாக நேற்றும் குதிரைக்குத்தி பள்ளத்தில், தீவட்டிப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேநேரம் சில இளைஞர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.