/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழமையான ராமர் பாதம் வழிபட அனுமதி பொங்கல் வைத்து திரளான பக்தர்கள் வழிபாடு

ADDED : ஆக 04, 2024 03:50 AM
சேலம்: சேலம், மாமாங்கம் அருகே உள்ள ஒரு தனியார் இடத்தை, ஒரு நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தியது. அந்த நிறு-வன அதிகாரிகள், அப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்-தனர். இதனால் அப்பகுதியில் இருந்த,
பழமையான ராமர் பாதத்தை வழிபட முடியவில்லை என, அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 18 கிராம மக்கள் வேதனை தெரிவித்-தனர்.
குறிப்பாக ராமர் பாதம், சூரிய பகவான் கன்னிமார்கள் அணிலுக்-கென தனி சிலை அமைந்துள்ள இடத்துக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கான பாதை அடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மக்கள் தெரிவித்து, ஆடிப்பெருக்கில் ராமர் பாதத்தை வழிபட வருவாய், போலீசாரிடம் கோரிக்கை விடுத்-தனர்.
அதற்கு அனுமதி கிடைத்ததால், அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் நேற்று காலை முதலே, குடும்பம், குடும்பமாக ராமர் பாதம் அமைந்துள்ள இடத்துக்கு சென்று பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.