/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1.65 கோடியில் ஏரி சீரமைக்கும் பணிக்கு பூஜை
/
ரூ.1.65 கோடியில் ஏரி சீரமைக்கும் பணிக்கு பூஜை
ADDED : செப் 03, 2024 03:18 AM
வாழப்பாடி: வாழப்பாடி, காளியம்மன் நகரில், 12.16 ஹெக்டேர் பரப்ப-ளவில் பாப்பான் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு, சேசன்சா-வடி, கோதுமலை, வெள்ளாளகுண்டம் மற்றும் முத்தம்பட்டி, அமனாக்கரடு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடை-களால் நீர்வரத்து பெறுகிறது.
வாழப்பாடி பகுதியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பெய்து வரும் மழையால், நீரோடைகளில் வரும் மழை நீர் மற்றும் நீரூற்றால் பாப்பான் ஏரியில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதைய-டுத்து, ஏரியை சீரமைத்து பூங்காவாக மாற்றும் நோக்கில், மத்-திய அரசின் அம்ரூத், 2.0 திட்டத்தின் கீழ், டவுன் பஞ்சாயத்து பொது நிதி, 88 லட்சம் ரூபாய் உட்பட மத்திய, மாநில அரசு வாயிலாக கூட்டு நிதி, 1.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்-டது.தொடர்ந்து ஏரியை சீரமைத்து, பூங்கா அமைக்கும் பணி துவக்க விழாவிற்காக, நேற்று பூமி பூஜை நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் கவிதா தலைமை வகித்தார். அட்மா குழு தலைவர் சக்க-ரவர்த்தி பணியை தொடங்கி வைத்தார்