/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விடப்படும் மீன் கழிவு நீர்
/
பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விடப்படும் மீன் கழிவு நீர்
பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விடப்படும் மீன் கழிவு நீர்
பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விடப்படும் மீன் கழிவு நீர்
ADDED : ஜூலை 08, 2024 07:38 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் ஓடும் காவிரி ஆற்றில் இருந்து, இடைப்பாடி நகராட்சி, ஒன்றியம், பூலாம்பட்டி டவுன் பஞ்சாயத்து, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது.
பூலாம்பட்டியில் காவிரி ஆற்றை ஒட்டி மீன்களை சுத்தம் செய்யும் வளாகம் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதன்மூலம் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. பூலாம்பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் அலட்சியத்தால் கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.