/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனியார் கல்லுாரி ஆய்வக உதவியாளர் கைது கர்ப்பம் கலைந்ததால் குழந்தையை கடத்தியது அம்பலம்
/
தனியார் கல்லுாரி ஆய்வக உதவியாளர் கைது கர்ப்பம் கலைந்ததால் குழந்தையை கடத்தியது அம்பலம்
தனியார் கல்லுாரி ஆய்வக உதவியாளர் கைது கர்ப்பம் கலைந்ததால் குழந்தையை கடத்தியது அம்பலம்
தனியார் கல்லுாரி ஆய்வக உதவியாளர் கைது கர்ப்பம் கலைந்ததால் குழந்தையை கடத்தியது அம்பலம்
ADDED : ஆக 11, 2024 02:49 AM
சேலம்: சேலம் அரசு மருத்துவ மனையில் குழந்தையை கடத்திய, தனியார் கல்லுாரி ஆய்வக உதவியாளரை, போலீசார் கைது செய்-தனர். அவருக்கு, 4 மாதத்தில் கர்ப்பம் கலைந்ததால், அதை குடும்பத்தினரிடம் மறைத்து வந்த நிலையில், குழந்தையை கடத்-தியது தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை மனைவி வெண்ணிலா, 26. இவருக்கு கடந்த, 5ல் சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்-தையை, நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, ஒரு பெண் கடத்திச்சென்றார். அவரது படம், அங்குள்ள கண்காணிப்பு கேம-ராவில் பதிவாகியிருந்தது.
இதுகுறித்த புகார்படி, டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலை-மையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு வாழப்பாடி அருகே முத்தம்-பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில், அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு, 4:00 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
காரிப்பட்டி, நேரு நகரை சேர்ந்தவர் வினோதினி, 24. இன்ஜினி-யரிங் படித்த இவர், தனியார் கல்லுாரியில் ஆய்வக உதவியாள-ராக உள்ளார். திருச்சியை சேர்ந்த அகிலனை, 11 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். வினோதினி கர்ப்பமாக இருந்த நிலையில், 4வது மாதம் கரு கலைந்துவிட்டது. இதுகு-றித்து அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.
மேலும் கர்ப்பமாக இருப்பதுபோல் நடித்துக்கொண்டிருந்தார். 7வது மாதத்தில் வளைகாப்பும் நடந்தது. வரும், 12ல் குழந்தை பிறக்கும் என, மருத்துவர்கள் கூறியதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை வேண்டும் என பல இடங்களில் கேட்-டுள்ளார். சமீபத்தில் வினோதினி சேலம் அரசு மருத்துவம-னைக்கு உறவினருடன் வந்து சென்றார். அப்போது மருத்துவம-னையில் குழந்தையை கடத்தி, குழந்தை பிறந்ததாக தெரிவித்து விடலாம் என முடிவு செய்தார். அதன்படியே வெண்ணிலாவிடம் பேச்சு கொடுத்தார்.
அவரது மாமியார் இந்திரா வந்தபோது, 'குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பது போல் தெரிகிறது.
அதனால் குழந்தையை பரிசோதனை செய்யுங்கள்' என, வினோ-தினி கூறியுள்ளார். தொடர்ந்து குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவரை பார்த்தபின், மருந்து, மாத்திரை எழுதிக்கொடுத்தார். அதை வாங்க, இந்திரா சென்றபோது, குழந்தையுடன் வினோ-தினி மாயமானார்.
கேமராவில் அவரது படம் இருந்ததால், அரசு, தனியார் மருத்துவ-மனைகள், பஸ் டிரைவர், கண்டக்டர், ஆட்டோ டிரைவர் உள்-ளிட்டோரின் சமூக வலைதளம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்-டது. விசாரணையில் சேலம் மருத்துவமனையில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ஆட்டோவில் சென்றதும், அங்கிருந்து தனியார் பஸ்சில் வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும் தெரிந்தது.
பின் பைக்கில் வந்தவரிடம் உதவி கேட்டு முத்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு வைத்து, அவருக்கு குழந்தை பிறந்துள்ளது என, உறவினர்களிடம் வினோ-தினி கூறியுள்ளார்.
அவரது உறவினர்களும் வந்து பார்த்துச்சென்றுள்ளனர். அங்கு வினோதினி கைது செய்யப்பட்டார். இதில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.