sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெரியார் பல்கலை நிதி அலுவலர் பொறுப்பு ஏற்க பேராசிரியர்கள் தயக்கம்

/

பெரியார் பல்கலை நிதி அலுவலர் பொறுப்பு ஏற்க பேராசிரியர்கள் தயக்கம்

பெரியார் பல்கலை நிதி அலுவலர் பொறுப்பு ஏற்க பேராசிரியர்கள் தயக்கம்

பெரியார் பல்கலை நிதி அலுவலர் பொறுப்பு ஏற்க பேராசிரியர்கள் தயக்கம்


ADDED : மே 31, 2024 03:23 AM

Google News

ADDED : மே 31, 2024 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: பெரியார் பல்கலையில் நிதி அலுவலர் பொறுப்பேற்க பேராசிரியர்கள் தயங்குகின்றனர்.

சேலம், கருப்பூர் பெரியார் பல்கலை துணைவேந்தராக ஜெகநாதன் பணிபுரிகிறார். அங்கு நிதித்துறை அலுவலராக சரவணக்குமார் என்பவரை, 2 மாதங்களுக்கு முன், தமிழக அரசு நிதித்துறை சார்பில் நியமனம் செய்யப்பட்டது. பேராசிரியர் தங்கவேல், 2006 பிப்., 10ல் பணியில் சேர்ந்து, பொறுப்பு பதிவாளராக இருந்து, 2024 பிப்., 29ல் ஓய்வு பெற்றார். இவரது பணி காலத்தில் பல்வேறு முறைகேடு புகார் எழுந்தது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி பழனிசாமி விசாரித்து, முறைகேடு நிரூபணமாக, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இதனால் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உயர்கல்வித்துறை அரசு செயலர் கார்த்திக், பரிந்துரை கடிதம் அனுப்பினார். ஆனால், பல்கலை சார்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில், தங்கவேல் ஓய்வு பெற்றார். அவருக்கு தற்காலிக ஓய்வூதியமாக, கடைசியில் அவர் வங்கிய சம்பளத்தில், 3ல், ஒரு பங்கான, 74,700 ரூபாய், கடந்த மார்ச் முதல் வழங்க, தற்போதைய பல்கலை பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி(பொ), கடந்த, 10ல் ஆணை வழங்கினார்.

இதனால் சிக்கல் ஏற்படும் என கருதிய சரவணக்குமார், கடந்த, 3ல் சென்னைக்கு இடமாறுதலில் சென்றுவிட்டார். பின் பொறுப்பு நிதி அலுவலராக நியமிக்கப்பட்ட முனைவர் கிருஷ்ணகுமார், அவரது உடல் நலத்தை காரணம் காட்டி விடுப்பில் சென்றார். இதனால் கணிதவியல் துறை பேராசிரியர் பிரகாஷ், பொறுப்பு நிதி அலுவலராக, துணைவேந்தரால் நியமிக்கப்பட்டார். அவரும், அப்பொறுப்பு வேண்டாம் என கூறி விடுப்பில் சென்றார். இதனால் பல்கலை நிதி

பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: தங்கவேலுவுக்கு இம்மாதம் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். இதில் நிதி அலுவலர் கையெழுத்திட வேண்டும். அப்படி கையெழுத்திட்டால் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதால், யாரும் நிதி அலுவலர் பொறுப்பை ஏற்க தயக்கம் காட்டுகின்றனர். தற்போது மேலாண்மை துறை பேராசிரியர் யோகானந்தம், பொறுப்பு நிதி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே, நிதித்துறை அலுவலராக பொறுப்பேற்க பேராசிரியர்கள் தயங்குவது குறித்து பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல் வெளியிட்ட வீடியோ, பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us