/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேட்பாளர், முகவர் வாகனங்களில் வாக்காளர்களை அழைத்து வர தடை
/
வேட்பாளர், முகவர் வாகனங்களில் வாக்காளர்களை அழைத்து வர தடை
வேட்பாளர், முகவர் வாகனங்களில் வாக்காளர்களை அழைத்து வர தடை
வேட்பாளர், முகவர் வாகனங்களில் வாக்காளர்களை அழைத்து வர தடை
ADDED : ஏப் 18, 2024 01:22 AM
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:
ஓட்டுப்பதிவுக்கு, 48 மணி நேரத்துக்கு முன் பிரசாரம் செய்வதை நிறுத்திட வேண்டும். தேர்தல் நாளில் வேட்பாளர்கள், முகவர்கள், அவரது பணியாளருக்கு தலா ஒரு வாகனத்துக்கு மட்டும் அனுமதி. வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் வேறு நபர்கள் பயணிக்க அனுமதி கிடையாது. பிற வாகனங்களில் டிரைவர் உள்பட, 5 பேர் மட்டும் செல்ல அனுமதி உண்டு.
தேர்தல் அலுவலரிடம் வாகனத்துக்கு பெற்ற அனுமதி கடிதத்தை தெளிவாக தெரியும்படி வாகனத்தில் ஒட்ட வேண்டும். இத்தகைய வாகனங்களில் வாக்காளர்களை அழைத்து செல்லக்கூடாது. அத்துடன் வாக்காளரின் இருப்பிடத்தில் இருந்து ஓட்டுச்சாவடிக்கும், அங்கிருந்து இருப்பிடத்துக்கும் வாகன வசதி ஏற்படுத்தி தரக்கூடாது. ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டும் ஓட்டுச்சாவடியில் அனுமதிக்கப்படுவர். ஓட்டுச்சாவடியில் மதியம், 3:00 மணிக்க முகவர்களை மாற்றம் செய்ய அனுமதி இல்லை.
தேர்தல் கமிஷனின் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை, வேட்பாளர்கள், கட்சி பிரதிநிதிகள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமீறில் புகார்களை, 24 மணி நேரமும், தேர்தல் கட்டுப்பாடு அறையில் உள்ள, 1800 - 425 - 7020 என்ற கட்டணமில்லா எண், 0427 - 2450031, 2450032, 2450046 ஆகிய தொலைபேசி எண், 94899-39699 என்ற மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

