ADDED : செப் 16, 2026 06:25 AM

அ நிறம் | அளவு
ஏற்காடு,:ஏற்காடு, முண்டகம்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் யுவராஜ், 22. இவர் நேற்று முன்தினம் மது அருந்தியிருந்தார்.
அப்போது ஒண்டிக்கடையில், பஸ் மற்றும் விநாயகர் சிலைகள் கொண்டு வந்த வாகனங்களை மறித்தார். அப்போது போக்குவரத்து சரிசெய்யும் பணியில் இருந்த பெண் போலீஸ் தவமணி, 'இப்படி செய்யக்கூடாது' என யுவராஜிடம் கூறினார். அவர், தவமணியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, போக்குவரத்து போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ஆரோன் அதிரூபராஜ் வந்தார். அவரும் யுவராஜூக்கு அறிவுரை கூறினார். அதற்கு அவர், தகாத வார்த்தைகளால் திட்டி, சட்டையை கிழித்து எஸ்.எஸ்.ஐ.,யை தாக்கினார். இதுகுறித்து அவர் புகார்படி, ஏற்காடு போலீசார் யுவராஜை கைது செய்தனர்.
