ADDED : செப் 16, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம், அம்மாபேட்டை, பெரிய கிணற்றை சேர்ந்தவர் மோகன், 56. இவர், 2017ல் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிந்தார். அந்த வழக்கில் நீதிமன்றம், 2021ல், ஆயுள் தண்டனை வழங்கியது. இதனால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமின் பெற்றார். ஆனால், 2024 அக்., 23ல், உயர்நீதிமன்றம், அவரது தண்டனையை உறுதி செய்தது.
ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். இதனால் சேலம் நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அம்மாபேட்டை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று வீடு அருகே இருந்த அவரை, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
