ADDED : செப் 23, 2026 06:46 AM
சேலம்:மத்திய
- மாநில அரசுகளை கண்டித்து, தொ.மு.ச., சார்பில், சேலம் கோட்டை ஸ்டேட்
வங்கி முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தொ.மு.ச., பேரவை
மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
அதில் தொழிலாளர் விரோத, 4
தொகுப்பு சட்டம் மற்றும் விதை சட்ட திருத்தத்தை திரும்ப பெறுதல்;
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, பொது வினியோக திட்டத்தை
வலுப்படுத்தல்; விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச
ஆதார விலை நிர்ணயித்தல்; சேலம் குடிநீர் திட்டத்தை
தனியாரிடமிருந்து திரும்ப பெறுதல்; 1,000 மின்சார பஸ்களை
தனியாரிடம் வழங்கக்கூடாது; 'ரீல்ஸ் ஆட்சி நடத்தாதே; ரியல் ஆட்சி
நடத்து' என்பன உள்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
எழுப்பினர்.
பேரவை செயலர் தமிழ்செல்வி, மாவட்ட கவுன்சில் செயலர்
பழனியப்பன், துணை செயலர்கள் முத்துசாமி, மஞ்சுளா, துணைத்தலைவர்
கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர்
பங்கேற்றனர்.
