/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலை பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு தொடக்கம்
/
மலை பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு தொடக்கம்
ADDED : செப் 15, 2024 04:04 AM
சங்ககிரி: சங்ககிரி சென்னகேசவ பெருமாள் பக்தர் குழு சார்பில், அங்கு மலை மீதுள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம், 5 சனிக்கிழமைகளில் வழிபடுவர். நடப்பாண்டு, 4 வாரமே உள்ளதால் ஆவணி கடைசி சனியான நேற்றே வழிபாட்டை தொடங்கினர்.
இதற்கு கடந்த, 12 காலை முதலே, அடிவாரத்தில் இருந்து சுவாமிக்கு தேவையான அபிஷேக, ஆராதனை பொருட்கள், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள், தலைச்சுமையாக எடுத்துச்சென்றனர். நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்கள், மலைக்கு சென்றனர். நேற்று சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து விழாக்குழு சார்பில், 34ம் ஆண்டாக காலை, மதியம் அன்னதானம், லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டன.