/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முயல் வேட்டை திருவிழா வனச்சரக அலுவலர் எச்சரிக்கை
/
முயல் வேட்டை திருவிழா வனச்சரக அலுவலர் எச்சரிக்கை
ADDED : மே 12, 2024 11:55 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி வனச் சரக அலுவலர் சிவக்குமார் அறிக்கை: சித்திரை மாதத்தில் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி தாலுகா பகுதிகளில் உள்ள சில கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா நடத்தப்படுகிறது. இதில் முயலை வேட்டையாடி வந்து படையல் செய்யப்படுகிறது. முயலை வேட்டையாடுவது குற்றம்.
கிராமங்களில், முயல் படத்துடன் பேனர் வைப்பது, அறிவிப்பு செய்வதும் குற்றம். வேட்டையாடுதல் என்பது வன விலங்கை, வேட்டை நாய்களை வைத்து துரத்துதல், பொறி வைத்து சிக்க வைத்தல், வலையில் சிக்க வைத்தல், விரட்டுதல், பிடிப்பதற்கு உணவு பொருட்களை வைப்பது, அழிப்பது உள்ளிட்ட அனைத்தும் அடங்கியது. இந்த உத்தரவை மீறி வன விலங்கை வேட்டையாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.