/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'எடை குறையாமல் ரேஷன் பொருள் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது'
/
'எடை குறையாமல் ரேஷன் பொருள் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது'
'எடை குறையாமல் ரேஷன் பொருள் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது'
'எடை குறையாமல் ரேஷன் பொருள் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது'
ADDED : ஆக 15, 2024 01:31 AM
சேலம், ''ரேஷன் பொருட்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதோடு, எடை குறைவின்றி கார்டுதாரர்களுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் பிருந்தாதேவி கூறினார்.
சேலம், சீரங்கபாளையம் ரேஷன் கடையில், பொருட்களை பாக்கெட்டில் வினியோகிக்கும் முறை குறித்து கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:
ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு ஆகியவற்றை பாக்கெட் மூலம் வினியோகிக்கும் திட்டத்துக்கு, 234 சட்டசபை தொகுதிகளில், தொகுதிக்கு ஒரு கடை என தேர்வு செய்யப்பட்டது. அந்த கடையில் தற்போது ஆய்வு செய்யப்பட்டது. இந்த கடையில் 706 கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை வினியோகிக்கப்படுகின்றன.
தற்போது அரிசி - 20 கிலோ, 10 கிலோ, 2 கிலோ அளவுகள்; சர்க்கரை - 2 கிலோ, 1 கிலோ, அரை கிலோ அளவுகள்; துவரம் பருப்பு, 1 கிலோ அளவில், 'பேக்கிங்' செய்யப்பட்டு கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. பொருட்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதோடு, எடை குறைவின்றி விரைவாக கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.