/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று சமரச வார விழா தொடக்கம்:வழக்குகளுக்கு தீர்வு காண அழைப்பு
/
இன்று சமரச வார விழா தொடக்கம்:வழக்குகளுக்கு தீர்வு காண அழைப்பு
இன்று சமரச வார விழா தொடக்கம்:வழக்குகளுக்கு தீர்வு காண அழைப்பு
இன்று சமரச வார விழா தொடக்கம்:வழக்குகளுக்கு தீர்வு காண அழைப்பு
ADDED : ஏப் 08, 2024 02:18 AM
சேலம்;நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச வார விழா தொடங்க உள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி அறிக்கை:
சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில், சமரச வார விழா, ஏப்., 8ல்(இன்று) தொடங்குகிறது.
இதை முன்னிட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தனி நபர், பண வசூல், குடும்பம், சொத்து ஆகிய தகராறுகள், காசோலை, மின்வாரியம், தொழிலாளர் நலம், உரிமையியல், இதர வழக்குகளை சமரச மையம் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.
இதற்கு பேச்சு நடத்தி, சமரச முறையில் தீர்வு காணப்படுவதால் வெற்றி பெற்றவர், தோற்றவர் பாகுபாடின்றி உறவுமுறை தொடர வழி செய்கிறது.
தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும். அதனால் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை, இம்மையத்தில் தீர்வு காண பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.