ADDED : மே 03, 2024 09:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜலகண்டாபுரம்:சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே பணிக்கனுாரில், சின்னப்பம்பட்டி சாலையில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று காலை துர்நாற்றம் வீசியது. மக்கள் பார்த்தபோது அழுகிய நிலையில், 3 சடலங்கள் கிடந்தன. ஒரு பெண், இரு ஆண்களின் சடலங்களை போலீசார் கைப்பற்றினர்.
அருகே, டி.வி.எஸ்., மொபட் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் நம்பர் பிளேட் எண்ணை வைத்து, போக்குவரத்து அலுவலகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த மூன்று பேரும் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.