/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர் திறப்பு 1,500 கன அடியாக குறைப்பு
/
மேட்டூர் அணை நீர் திறப்பு 1,500 கன அடியாக குறைப்பு
மேட்டூர் அணை நீர் திறப்பு 1,500 கன அடியாக குறைப்பு
மேட்டூர் அணை நீர் திறப்பு 1,500 கன அடியாக குறைப்பு
ADDED : ஜூன் 11, 2024 08:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. டெல்டா மாவட்ட காவிரி கரையோர மக்களின் குடிநீர் தேவைக்கு அணையில் இருந்து கடந்த மாதம், 16ல், வினாடிக்கு, 1,500 கன அடியாக இருந்த நீர்திறப்பு, 17ல், 2,100 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு நீர் திறப்பு மீண்டும் வினாடிக்கு, 1,500 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 795 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 390 கன அடியாக சரிந்தது. நீர்திறப்பு கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 43.95 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 43.71 அடியாக சரிந்தது.