ADDED : செப் 15, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நாகியம்பட்டி அங்கன்வாடி மையம் அருகே நேற்று முன்தினம் பீடம் அமைத்து, 1 அடி உயரத்தில் விநாயகர் கற்சிலை அமைக்கப்பட்டது.
திறந்தவெளியில் கோவில் அமைத்து, அப்பகுதியினர் வழிபட்டனர். இதை அறிந்து தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர், தம்மம்பட்டி போலீசார் வந்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றி, தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர். தொடர்ந்து கான்கிரீட் பீடத்தை, பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். சிலை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அனுமதியின்றி சிலை அமைக்கக் கூடாது என, வருவாய்த்துறையினர் அறிவுறுத்திச்சென்றனர்.