ADDED : நவ 07, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
சங்ககிரி, நவ. 7-
தேவூர் அருகே வட்ராம்பாளையம் வழி சாலையின் இருபுறமும் வீடுகள், வைக்கோல் புற்கள், விறகுகள் உள்ளிட்டவற்றை போட்டு, மக்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனால் நேற்று, சாலை ஓரங்களில் இருந்த வாழை மரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சாலைத்துறையினர், பொக்லைன் மூலம் அகற்றினர்.