/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு
/
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு
ADDED : ஆக 09, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அருகே வளையமாதேவியை சேர்ந்தவர் பால்வண்ணன், 50.
இவரது, 70 அடி ஆழ விவசாய கிணற்றில், 10 அடியில் தண்ணீர் உள்ளது. அந்த வழியே அதே ஊரைச் சேர்ந்த, கூலித்-தொழிலாளி முத்துசாமி, 49, நேற்று நடந்து சென்றார். அப்போது, தவறி கிணற்றில் விழுந்தார். இதுகுறித்து ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு மதியம், 3:50 மணிக்கு மக்கள் தகவல் அளித்-தனர். 10 நிமிடத்தில் அங்கு வந்த வீரர்கள், கிணற்றில் இறங்கி, வலை உதவியுடன் ஒரு மணி நேரத்துக்கு பின் முத்துசாமியை உயிருடன் மீட்டனர். ஆனால் படுகாயம் அடைந்திருந்ததால் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்