/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஓய்வு போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலனை உடனே வழங்க வேண்டும்'
/
'ஓய்வு போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலனை உடனே வழங்க வேண்டும்'
'ஓய்வு போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலனை உடனே வழங்க வேண்டும்'
'ஓய்வு போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலனை உடனே வழங்க வேண்டும்'
ADDED : செப் 01, 2024 03:37 AM
சேலம்: ஐக்கிய தொழிற்சங்க காங்.,(யூ.டி.யூ.சி.,) அகில இந்திய, 10வது மாநாடு சேலத்தில் இன்று நடக்கிறது.
இதுதொடர்பாக அதன் பொதுச்செயலர், கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி., பிரேமச்சந்திரன், சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: மத்திய அரசு, 44 தொழிலாளர் சட்டங்களை நான்காக சுருக்கியதை கண்டிப்பது உள்பட மத்திய, மாநில அரசு-களுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்-ளன. இது தொழிலாளர் நலன் சார்ந்த மாநாடாக அமையும்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக, 'அவுட் சோர்சிங்' முறை அமல்ப-டுத்தப்படுகிறது. குறிப்பாக செவிலியர், ஆசிரியர், மின் ஊழியர் பணியிடத்துக்கு பெருமளவில், 'அவுட்சோர்சிங்' முறை கையா-ளப்படுகிறது. இதற்கு நிதி பற்றாக்குறை காரணம் எனக்கூறுவது முற்றிலும் தவறு.
போக்குவரத்து தொழிலாளர் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலனை உடனே வழங்க வேண்டும்.
புது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும். இல்லை எனில் அனைத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து அர-சுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோம். மத்திய, மாநில அரசுகள், 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருப்ப-தாக கூறுவது பொய். இவ்வாறு அவர் கூறினார்.