ADDED : ஜூலை 07, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே நடுவலுார் ஊராட்சி பள்ளக்காட்டில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள ஆழ்-துளை குழாய் கிணறு பராமரிப்பின்றி குடிநீர் வினியோகிக்கப்பட-வில்லை. நேற்று காலை, 11:00 மணிக்கு அப்பகுதி மக்கள், ஆத்துார் - கெங்கவல்லி சாலையில் காலி குடங்களுடன் மறி-யலில் ஈடுபட்டனர்.
பி.டி.ஓ., தாமரைச்செல்வி பேச்சு நடத்தி, குடிநீர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார். பின் மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் 30 நிமிடம் போக்-குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த, 4ல் ஆழ்துளை குழாய் கிணற்றை சீரமைக்கக்கோரி, பள்ளக்காடு மக்கள், நடுவலுார் ஊராட்சி அலுவலகத்தை பூட்டு போட்டிருந்தனர்.