/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
/
ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
ADDED : ஜூலை 02, 2024 05:59 AM
ஆத்துார் : ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், ஆறு லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது.
சேலம் மாவட்டம், ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஆத்துார், தலைவாசல், திட்டக்குடி, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் பகுதிகளில் இருந்து விவசாயிகள், 96.67 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஆத்துார், திருப்பூர், திருச்சி, சேலம், கோவை வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். பி.டி., ரகம் குவிண்டால், 6,369 முதல், 7,589 ரூபாய்; டி.சி.ஹெச்., ரகம் குவிண்டால், 7,769 முதல் 9,689 ரூபாய்; கொட்டு பருத்தி (கழிவு), 3,089 முதல் 4,299 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், ஆறு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கடந்த வாரத்தை விட, பி.டி., ரகம் குவிண்டால், 190 ரூபாய், டி.சி.ெஹச்., ரகம், 200 ரூபாய் விலை அதிகரித்து இருந்தது.