/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.12.50 லட்சம் மோசடி மளிகை வியாபாரிக்கு வலை
/
ரூ.12.50 லட்சம் மோசடி மளிகை வியாபாரிக்கு வலை
ADDED : ஜூலை 28, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், லீபஜாரில் மளிகை கடை நடத்துபவர் மாரிமுத்து, 46. இவரிடம் சேலம், கிழக்கு பெரமனுரில் மளிகை கடை நடத்தும், வலசையூரை சேர்ந்த ரவிக்குமார், 58, கடந்த ஜன, 4ல், 15.96 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கினார்.
ஆனால் அந்த பணத்தை கொடுக்கவில்லை. பலமுறை கேட்-டபின், 3.39 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். மீதி, 12.57 லட்சம் ரூபாயை, இதுவரை கொடுக்கவில்லை. இதுகுறித்து மாரி-முத்து நேற்று முன்தினம் அளித்த புகார்படி, பள்ளப்பட்டி போலீசார், ரவிக்குமார் மீது வழக்குப்பதிந்து அவரை தேடுகின்-றனர்.