/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் - விருதாசலம் ரயில் வழக்கம்போல் இயங்கும்
/
சேலம் - விருதாசலம் ரயில் வழக்கம்போல் இயங்கும்
ADDED : மார் 25, 2024 01:39 AM
சேலம்:சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிக்கை:சின்னசேலம்
அருகே நடக்கவிருந்த பொறியியல் பணியால், மார்ச் 25(இன்று),
விருதாசலம் -சேலம் ரயில், சேலம் - விருதாசலம் ரயில் ரத்து
செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பணி
ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் காலை, 6:15க்கு புறப்படும் விருதாசலம் -
சேலம் ரயில், காலை, 10:30க்கு கிளம்பும் சேலம் - விருதாசலம் ரயில்,
வழக்கமான நேரத்தில் இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரயில் தாமதம்
சேலத்தில்
இருந்து நாமக்கல், கரூர், திருச்சி வழியே சேலம் - மயிலாடுதுறை ரயில்
இயக்கப்படுகிறது. நேற்று மதியம், 2:05க்கு கிளம்ப வேண்டிய இந்த
ரயில், 2 மணி நேரம், 25 நிமிடம் தாமதமாக, மாலை, 4:30க்கு புறப்பட்டது.
மறுமார்க்கத்தில் ரயில் வருவதில் ஏற்பட்ட தாமதத்தால், இந்த மாற்றம்
அறிவிக்கப்பட்டது. இதனால் பயணியர் காத்திருந்து
அவதிக்குள்ளாகினர்.

