/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்; அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
சேலம் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்; அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சேலம் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்; அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சேலம் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்; அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : பிப் 26, 2025 07:20 AM
சேலம்: சேலம் மாநகராட்சியில், ரூ.1,044 கோடியில், நேற்று பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சேலம் மாநகராட்சியில், நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத்தில், 2025-26 பட்ஜெட்டை, மேயர் ராமச்சந்திரன் தாக்கல் செய்து பேசினார். 2025-26 பட்ஜெட்டில், மொத்த வருவாய், 1043.43 கோடி ரூபாயாகவும், செலவினம், 1044.69 கோடி ரூபாயாகவும் உள்ளது. 1.26 கோடி ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள்: பாதாள சாக்கடை அடைப்பு பழுது நீக்கம், பராமரிப்புக்கு, 90 லட்சத்தில் இரண்டு ஜெட் ரோடிங் மிஷின் வாங்குதல், செட்டிச்சாவடி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில், சூரிய சக்தி மின் ஆலை பயன்பாட்டுக்கு, 2.50 கோடியில் இரண்டு நீர்த்தேக்க தொட்டி, 90 லட்சம் ரூபாய் மதிப்பில் குழாய் அமைக்கப்பட உள்ளது. அஸ்தம்பட்டி மண்டலத்தில், படையப்பா நகர், அம்மாபேட்டை மண்டலத்தில் வர்மாசிட்டி ஆகிய இடங்களில், மனை பிரிவு பொது திறந்தவெளி பகுதிகளில், ரூ.1 கோடியில் ஸ்கேட்டிங் பயிற்சி தளம் அமைத்தல், தொங்கும் பூங்கா, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக வரி வசூல் மையங்கள், 24 மணி நேரம் இயங்கும் மையங்களாக மாற்றப்பட உள்ளன.
செட்டிச்சாவடியில் திடக்கழிவு கிடங்கு உட்புறம், 3 கோடி மதிப்பில் சிமென்ட் சாலை அமைத்தல், புது பஸ் ஸ்டாண்ட் முன்புறத்தில் சிறுநீர் கழிப்பிடம், தண்ணீர் வசதி ஏற்படுத்துதல், குறிஞ்சி நகர், அண்ணா வாத்தியார் தெரு பகுதியில் ஓடை அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க 'பவுண்ட்' உருவாக்கப்பட்டு, பிடித்து செல்வதற்கான வாகனம், 30 லட்சம் ரூபாயில் வாங்கப்பட உள்ளது.
அ.தி.மு.க., வெளிநடப்பு
பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி கொறடா செல்வராஜூ பேசியதாவது: புதிய திட்ட அறிவிப்புகளில், பாதாள சாக்கடை திட்ட பராமரிப்புக்கு மிஷின் வாங்குவதாக உள்ளது. ஒப்பந்தப்படி, ஒப்பந்ததாரர்தானே பராமரிக்க வேண்டும். யாருக்காக மிஷின் வாங்குகிறீர்கள்? ஒரே திட்டத்துக்கு வேறு வேறு பெயர்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டை மட்டும் மாற்றிவிட்டு, அதே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இதில் உபயோகமாக எதுவும் இல்லை.
பேசிக்கொண்டிருக்கும் போதே, தி.மு.க., கவுன்சிலர்கள் பேச விடாமல் கூச்சலிட்டு தடுத்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி தலைமையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து யாதவமூர்த்தி கூறுகையில்,'' ஒவ்வொரு ஆண்டும், பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வாகன நிறுத்தங்கள், கட்டடங்கள் என எதையும் வாடகைக்கு விடாமல், வருவாய் இழப்பை உருவாக்கி வருகின்றனர்,'' என்றார்.

