/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் குரூப் - 2 தேர்வு 10,947 பேர் 'ஆப்சென்ட்'
/
சேலத்தில் குரூப் - 2 தேர்வு 10,947 பேர் 'ஆப்சென்ட்'
சேலத்தில் குரூப் - 2 தேர்வு 10,947 பேர் 'ஆப்சென்ட்'
சேலத்தில் குரூப் - 2 தேர்வு 10,947 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : செப் 15, 2024 04:00 AM
சேலம்: டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2, 2ஏ' முதல்நிலை தேர்வுக்கு எழுத்துத்தேர்வுக்கு சேலம் மாவட்டத்தில், 46,856 பேர் விண்ணப்பித்திருந்தனர். சேலம், ஆத்துார், மேட்டூர், ஓமலுார், சங்ககிரி, வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், 162 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று, 35,909 பேர் தேர்வு எழுதினர். 10,947 பேர் வரவில்லை. 162 தலைமை கண்காணிப்பாளர், 46 நடமாடும் கண்காணிப்பு குழு, 14 பறக்கும் படையினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம் குளுனி பள்ளியில் நடந்த தேர்வை, கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார்.
விழிப்புணர்வு போட்டி154 மாணவர்கள் பங்கேற்பு
சேலம்: ஜெனீவா ஒப்பந்த நாளை முன்னிட்டும், 75வது ஆண்டை கொண்டாடும்படியும் சேலம் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி கல்லுாரியில், மாணவ, மாணவியருக்கு நேற்று முன்தினம், மாவட்ட அளவில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. 14 கல்லுாரிகளில் இருந்து, 154 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ரத்த தானம் குறித்த பேச்சு போட்டி, கட்டுரை, ஓவியம், வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களை பிடித்தவர், மாநில போட்டிக்கு தேர்வாகினர். விழாவில் பெரியார் பல்கலை இளைஞர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் பத்மசேகரன், மாவட்ட அமைப்பாளர் வடிவேல் பங்கேற்றனர்.