/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாய்மை பணியாளர்கள் சாலை மறியலுக்கு முயற்சி
/
துாய்மை பணியாளர்கள் சாலை மறியலுக்கு முயற்சி
ADDED : ஆக 21, 2024 01:45 AM
துாய்மை பணியாளர்கள்
சாலை மறியலுக்கு முயற்சி
இடங்கணசாலை, ஆக. 21-
சம்பள பிரச்னையால், துாய்மை பணியாளர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர்.
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு குப்பை சேகரிக்க, 65 பேர் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலியில் பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதில்லை என கூறி, நேற்று காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை பணிபுரியவில்லை. தொடர்ந்து, 9:30 மணிக்கு, கே.கே.நகர் பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியலுக்கு கூடினர். மகுடஞ்சாவடி போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, கலைந்து போகச்செய்தனர்.
இதுகுறித்து உள்ளாட்சி துறை துப்புரவு பணியாளர் சங்க சேலம் மாவட்ட பொதுச்செயலர் பெரியசாமி கூறியதாவது:
இடங்கணசாலை நகராட்சியில் கமிஷனர் மாறியதால் சம்பளம் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தினமும், 638 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.
.ஆனால், 2022ல் இருந்து தற்போது வரை, 429 ரூபாய் வழங்கி அதிலும் பி.எப்., - இ.எஸ்.ஐ., பிடித்தம் போக, 350 ரூபாய் மட்டும் வழங்குகின்றனர். தினமும், 638 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் விரைவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.