/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரு தரப்பு தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு:போலீஸ் ஸ்டேஷனில் கார் கண்ணாடி உடைப்பு
/
இரு தரப்பு தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு:போலீஸ் ஸ்டேஷனில் கார் கண்ணாடி உடைப்பு
இரு தரப்பு தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு:போலீஸ் ஸ்டேஷனில் கார் கண்ணாடி உடைப்பு
இரு தரப்பு தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு:போலீஸ் ஸ்டேஷனில் கார் கண்ணாடி உடைப்பு
ADDED : மார் 22, 2024 01:46 AM
கெங்கவல்லி;கெங்கவல்லியில் உள்ள, டாஸ்மாக் கடை அருகே, 'பார்' உள்ளது. அதை, சங்ககிரியை சேர்ந்த சென்னகிருஷ்ணன் உரிமம் பெற்று நடத்துகிறார். அங்கு சிலம்பரசன், புகழ், தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர்.
அங்கு நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு கெங்கவல்லியை சேர்ந்த சக்திவேல், 40, தகராறு செய்துள்ளார்.
பார் பணியாளர்கள், சக்திவேலை தாக்கினர். அவரது உறவினர்கள், சிலம்பரசனை தாக்கினர். கெங்கவல்லி போலீசார், அங்கு சென்று விசாரித்தனர்.
அதில் சிலம்பரசனை தாக்கிய, கெங்கவல்லியை சேர்ந்த செல்வம், 40, சக்திவேல், 40, சுரேஷ், 44, மீது வழக்கு பதிந்த போலீசார், நேற்று அவர்களை கைது செய்தனர்.
ஆனால் மாலை, 4:00 மணிக்கு சிலம்பரசன் தரப்பை சேர்ந்த சசிகுமார், கடம்பூர் சாலையில் நடந்து வந்தார். அப்போது கெங்கவல்லியை சேர்ந்த, வெங்கடேசன் உள்பட, 5 பேர், 'ஸ்விப்ட்' காரில் வந்து சசிகுமாரை வழிமறித்து அரிவாளில் வெட்டியுள்ளனர். இதை அறிந்த சசிகுமாரின் உறவினர்கள், வெங்கடேசன் காரின் பின்புற கண்ணாடியை நொறுக்கினர்.
இதனால் காரை எடுத்துக்கொண்டு கெங்கவல்லி ஸ்டேஷனுக்கு வந்து அவர் தஞ்சமடைந்தார். அங்கு சசிகுமார் உறவினர்கள் சென்று, வெங்கடேசனை வெளியே விடும்படி கூறி, ஸ்டேஷனில் நின்றிருந்த வெங்கடேசன் காரின் முன்புற கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.
ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார், இருதரப்பினர் இடையே பேச்சு நடத்தினார். காயமடைந்த சசிகுமாரை, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் புகார்படி வெங்கடேசன், சேலம், கிச்சிப்பாளையம் ராவணபிரபு, கெங்கவல்லி கார்த்திக், பிரதாப், விஜய் மீது வழக்கு பதிந்தனர்.

