ADDED : ஜூலை 07, 2024 01:19 AM
ஆத்துார் : ஆத்துார், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தியேட்டரில், 'சிப்ஸ்' சாப்பிட்ட சிலருக்கு, உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்-ளது.
இதுகுறித்து ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபாகமா-லிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நகராட்சி துப்புரவு அலுவலர் பழனிசாமி தலைமையில் பணியாளர்கள் ஆய்வு செய்-தனர். அப்போது தியேட்டரில் இருந்த கேன்டீனில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக, 'சீல்' வைத்தனர்.
தொடர்ந்து, காமராஜர் சாலை, கேசவேலு தெருவில் உள்ள மற்-றொரு தியேட்டரின் கேன்டீனில் காலாவதி உணவு பொருட்கள் இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்தனர்.
அந்த கேன்டீனுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இந்த தியேட்டர்களுக்கு உணவு பொருட்களை தயாரித்து கொடுக்கும், ஆத்துார், காதர்பேட்டை, பாரதியார் தெருவை சேர்ந்த ரங்கநாதன், 50, என்பவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.