/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனியார் பள்ளி வேன் பொக்லைன் பறிமுதல்
/
தனியார் பள்ளி வேன் பொக்லைன் பறிமுதல்
ADDED : மே 30, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், கெங்கவல்லியில், ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமையில் குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அனுமதி சீட்டு இல்லாமல், தகுதி சான்றிதழ் புதுப்பிக்காமல், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட தனியார் பள்ளி வேனை பறிமுதல் செய்து கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, மேல் நடவடிக்கைக்கு அறிவுறுத்தினர்.
அதேபோல் ஆத்துாரில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, 'பொக்லைன்' வாகனத்தை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த வாகனங்களுக்கு சாலை வரி உள்பட, 2 லட்சம் ரூபாய் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.