/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அலுவலகம் அமைத்து லாட்டரி சீட்டு விற்பனை
/
அலுவலகம் அமைத்து லாட்டரி சீட்டு விற்பனை
ADDED : ஆக 09, 2024 02:28 AM
ஓமலுார்: சேலம் கருப்பூர் அருகே மூங்கில்பாடி ஊராட்சி சோரையான் காடு கரட்டுமேட்டில், சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்கப்படுகி-றது. இரு ஷட்டர் அமைக்கப்பட்ட சிறு கட்டடத்தில் உள்ளவ-ரிடம் பணம் கொடுத்தால் அதற்கான லாட்டரி சீட்டு, கையடக்க மிஷின் மூலம் எண்கள் அச்சிடப்பட்டு உடனே வழங்கப்படுகி-றது.
காலை, 8:00 முதல், மதியம், 3:00 மணி வரை, அந்த அலுவ-லகம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு காலை முதலே மக்கள் வரத்-தொடங்கி விடுகின்றனர். அவர்கள் மூலம் கருப்பூர், தட்டாஞ்சா-வடி, வெள்ளாளப்பட்டி, மூங்கில்பாடி உள்பட, 10க்கு மேற்-பட்ட இடங்களில், சில குறிப்பிட்ட நபர்களால் லாட்டரி சீட்டு விற்பனை நடக்கிறது. இதனால் கூலித்தொழிலாளர்கள், விவசா-யிகள் பலர், தினமும் பணத்தை இழந்து வருகின்றனர். உரிய கவ-னிப்பால், கருப்பூர் போலீசாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.