/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.இ.டி.சி., ஆன்லைன் முன்பதிவில் பிற போக்குவரத்து 71 ஏசி பஸ்கள் இணைப்பு
/
எஸ்.இ.டி.சி., ஆன்லைன் முன்பதிவில் பிற போக்குவரத்து 71 ஏசி பஸ்கள் இணைப்பு
எஸ்.இ.டி.சி., ஆன்லைன் முன்பதிவில் பிற போக்குவரத்து 71 ஏசி பஸ்கள் இணைப்பு
எஸ்.இ.டி.சி., ஆன்லைன் முன்பதிவில் பிற போக்குவரத்து 71 ஏசி பஸ்கள் இணைப்பு
ADDED : ஏப் 09, 2024 02:08 AM
சேலம்: விரைவு போக்குவரத்து கழக பஸ் முன்பதிவில் பிற போக்குவரத்து கழகத்தின், 71 குளிர்சாதன வசதி பஸ்களுக்கும், முன்பதிவு செய்து கொள்ளும் வசதி, நேற்று முன்தினம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால், அனல் காற்று வீசுகிறது. இதில் இருந்து தப்பிக்க பயணிகள் குளிர்சாதன வசதி பஸ்களுக்கு படையெடுப்பதால், அனைத்து பஸ்களும் நிரம்பி வழிகின்றன. இதில், எஸ்.இ.டி.சி., பஸ்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.பிற போக்குவரத்து கழகத்தின் குளிர்சாதன வசதி பஸ்களுக்கு, முன்பதிவு செய்யும் வசதி இல்லாததால், பயணிகள் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில், பிற போக்குவரத்து கழகங்களின், 71 குளிர் சாதன பஸ்களை முன்பதிவில் இணைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:அரசு போக்குவரத்து கழக பஸ்களில், தொலை துாரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக கோடை கால விடுமுறையை முன்னிட்டு, 387 பஸ்களில் குளிர் சாதன வசதி ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தற்போது கூடுதலாக, 71 குளிர்சாதன பஸ்களும் ஆன்லைன் முன்பதிவில் இணைக்கப்பட்டு, 458 பஸ்களுக்கு முன்பதிவு வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ செயலி மூலம், முன்பதிவு செய்து சிரமமின்றி பயணம் செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

