/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழை நீருடன் கழிவு நீர் திறப்பு பச்சை நிறத்திற்கு மாறிய ஏரி
/
மழை நீருடன் கழிவு நீர் திறப்பு பச்சை நிறத்திற்கு மாறிய ஏரி
மழை நீருடன் கழிவு நீர் திறப்பு பச்சை நிறத்திற்கு மாறிய ஏரி
மழை நீருடன் கழிவு நீர் திறப்பு பச்சை நிறத்திற்கு மாறிய ஏரி
ADDED : மே 16, 2024 02:23 AM

வீரபாண்டி:சேலத்தில் சில நாட்களாக மதிய வேளையில் மழை பெய்கிறது. மழையை பயன்படுத்தி, திருமணிமுத்தாறு கரையோரங்களில் செயல்படும் சாயம் உள்ளிட்ட ரசாயன பட்டறைகளில் இருந்து கழிவுநீரை அப்படியே ஆற்றில் விடுகின்றனர். இதனால் ஆற்றில் இருந்து ஆட்டையாம்பட்டி அருகே, இனாம் பைரோஜி புதுப்பாளையம் ஏரிக்கு வரும் நீர், மாசடைந்து பச்சை நிறத்துக்கு மாறி துர்நாற்றம் வீசுகிறது.
அந்த ஏரி நிரம்பி உபரிநீர், கால்வாயில் பச்சை நிறத்தில் வழிந்தோடுகிறது. உபரிநீரை பயன்படுத்தி, சுற்று வட்டாரங்களில், 300 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. கழிவால் நிறம் மாறிய தண்ணீரால் பயிர்களை நோய் தாக்கி, மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதனால், ஆற்றில் சாயம் உள்ளிட்ட ரசாயன கழிவு கலப்பதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.