ADDED : மார் 04, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., வீரமுத்து, 59. மேட்டூரில் குடி-யிருந்து வந்தவர், ஆறு மாதங்களுக்கு முன் கொங்கணாபுரம் ஸ்டேஷனுக்கு மாறுதலாகி வந்தார்.
ஒரு மாதமாக, மூச்சுத்திணறலால் அவ-திப்பட்டு வந்தார். கடந்த வாரம், மருத்துவமனை சென்று வந்தார். நேற்று ஸ்டேஷனில் வீரமுத்து பணியில் இருந்துள்ளார். மதியம், 1:30 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு, சக போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் அவர் நெஞ்சு-வலியால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவி-த்தனர்.