ADDED : மே 31, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள நீதிமன்ற வளாகத்துக்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
நேற்று அந்த வளாகம் முன் கொடிக்கம்பம் அருகே உள்ள மரத்தில் இருந்து, 4 அடி நீள பாம்பு, அங்கு நிறுத்தியிருந்த வாகனம் மீது விழுந்தது. இருசக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை பிடிக்க, தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்துச்சென்றனர்.