/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சியில் இன்று சிறப்பு வரி வசூல் முகாம்
/
மாநகராட்சியில் இன்று சிறப்பு வரி வசூல் முகாம்
ADDED : ஏப் 28, 2024 04:34 AM
சேலம்: சேலம் மாநகராட்சியில் இன்று சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடக்கின்றன.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் அறிக்கை:
சேலம் மாநகராட்சியில், 2024 - 25ம் ஆண்டின், முதல் அரையாண்டு சொத்து வரியை, ஏப்., 30க்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு, 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு வசதியாக ஏப்., 28ல்(இன்று) மாநகராட்சியின், 4 மண்டலங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடக்கின்றன.
அதன்படி சூரமங்கலம் மண்டலத்தில் குரங்குச்சாவடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பள்ளப்பட்டி கூட்டுறவு மேலாண் சொசைட்டி; அஸ்தம்பட்டி மண்டலத்தில் அழகாபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், வெங்கடப்ப செட்டி தெரு அம்மா உணவக வளாகம்; அம்மாபேட்டை மண்டலத்தில் ஆதிசெல்வன் தெரு மாநகராட்சி துவக்கப்பள்ளி, காமராஜர் நகர் துவக்கப்பள்ளி; கொண்டலாம்பட்டி மண்டலத்தில் பெருமாள் கோவில் மேடு காளியம்மன் கோவில் மண்டபம், கோவிந்தம்மாள் நகர் கிருத்திகா அபார்ட்மென்ட் ஆகிய இடங்களில் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை முகாம்கள் நடக்கின்றன. மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

