ADDED : மார் 29, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம்
வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் -
கொச்சுவேலி ரயில் வரும், 31 மதியம், 2:15 மணிக்கு புறப்பட்டு சென்னை
எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு,
திருப்பூர், கோவை வழியே அடுத்தநாள் காலை, 11:30 மணிக்கு கொச்சுவேலியை
அடையும். சேலத்துக்கு இரவு, 9:50, ஈரோட்டுக்கு, 10:55க்கு வந்து
செல்லும்.
மறுமார்க்கத்தில் ஏப்., 1 மதியம், 2:30 மணிக்கு கிளம்பி
அடுத்தநாள் காலை, 10:55 மணிக்கு தாம்பரத்தை அடையும். ஈரோட்டுக்கு
அதிகாலை, 2:25, சேலத்துக்கு, 3:25க்கு வந்து செல்லும். இத்தகவலை சேலம்
ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

