/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தபால் தலை சேகரிப்பு வினாடி - வினா பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
தபால் தலை சேகரிப்பு வினாடி - வினா பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தபால் தலை சேகரிப்பு வினாடி - வினா பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தபால் தலை சேகரிப்பு வினாடி - வினா பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 11, 2024 02:40 AM
சேலம்: தபால் தலை சேகரிப்பு வினாடி - வினா போட்டியில் பங்கேற்க, பள்ளி மாணவ, மாணவியரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு-கின்றன.
இதுகுறித்து சேலம் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை:
'தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' திட்டத்தில், 6 முதல், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தபால் தலை சேகரிப்பு வினாடி - வினா போட்டி நடக்க உள்ளது. வெற்றி பெறுவோருக்கு பரிசு தொகையாக, 6,000 ரூபாய் வழங்கப்படும். இதில் பங்கேற்க, தபால் தலை சேகரிப்பு மன்ற உறுப்பினராகவோ, தபால் தலை சேகரிப்பு கணக்கு உள்ளவராகவோ இருக்க வேண்டும். விண்-ணப்ப படிவத்தை, www.tamilnadupost.cept.gov.in என்ற இணைய-தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 'போஸ்ட் மாஸ்டர் ஜென்ரல், மேற்கு மண்-டலம், கோவை - 641002' என்ற முகவரிக்கு, செப்., 6க்குள் அனுப்ப வேண்டும். செப்., 28ல் போட்டி நடக்க உள்ளது. விபரம் பெற, சேலம் கிழக்கு கோட்ட தபால் அலுவலகத்தை, 0427 - 2253050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.