/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பஸ் மீது கல்வீச்சு மர்ம நபர்களுக்கு வலை
/
அரசு பஸ் மீது கல்வீச்சு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : செப் 05, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேச்சேரி: சேலம் மாவட்டம் மேச்சேரி பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன், 45. இவர் மதுரையில் இருந்து அரசு பஸ்சை, நேற்று முன்தினம் இரவு மேட்டூருக்கு ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலை, 2:15 மணிக்கு மேச்சேரி அருகே, 5வது மைல் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத, 3 பேர், பஸ் மீது கல் வீசினர். அதில் பஸ் வலது புறம் இருந்த, அவசர வழி கதவு கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த புகார்படி மேச்சேரி போலீசார், மர்ம நபர்களை தேடுகின்றனர்.