/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோடைகால பயிற்சி முகாம் வீரர்கள் பதிவு செய்யலாம்
/
கோடைகால பயிற்சி முகாம் வீரர்கள் பதிவு செய்யலாம்
ADDED : ஏப் 28, 2024 04:06 AM
சேலம்: கோடைகால பயிற்சி முகாமில் பதிவு செய்ய வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் அறிக்கை:
சேலம் மாவட்ட அளவில் கோடைகால பயிற்சி முகாம், காந்தி மைதானத்தில் வரும், 29 முதல், மே, 13 வரை நடக்க உள்ளது.
காலை, 6:00 முதல், 8:00 மணி; மாலை, 4:30 முதல், 6:30 மணி வரை, கால்பந்து, தடகளம், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து விளையாட்டுகளுக்கு பயிற்சி நடக்க உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
இதற்கு ஆன்லைன் மூலம் மட்டும், 200 ரூபாய் கட்டணம் பெறப்படும். பங்கேற்பாளர்கள், 29 அன்று காலை, 6:00 மணி வரை, பெயர்களை பதிவு செய்யலாம். ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களை, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

