/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சூரத் சேலைகளின் வரத்து, விற்பனை அதிகரிப்பு இளம்பிள்ளையில் சேலை உற்பத்தி கடும் பாதிப்பு
/
சூரத் சேலைகளின் வரத்து, விற்பனை அதிகரிப்பு இளம்பிள்ளையில் சேலை உற்பத்தி கடும் பாதிப்பு
சூரத் சேலைகளின் வரத்து, விற்பனை அதிகரிப்பு இளம்பிள்ளையில் சேலை உற்பத்தி கடும் பாதிப்பு
சூரத் சேலைகளின் வரத்து, விற்பனை அதிகரிப்பு இளம்பிள்ளையில் சேலை உற்பத்தி கடும் பாதிப்பு
ADDED : ஜூலை 30, 2024 05:24 AM
மகுடஞ்சாவடி : விலை மலிவான சூரத் சேலைகளின் வரத்து மற்றும் விற்பனை காரணமாக, இளம்பிள்ளையில் ஜவுளி உற்பத்தி தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்-களில், விசைத்தறியில் சேலை உற்பத்தி பிரசித்தி பெற்றது. இங்கு உற்பத்தியாகும் செயற்கை பட்டு சேலைகள், இந்தியாவில் பல்-வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டது. இளம்-பிள்ளை சேலைகள் என பெயர் வாங்கும் அளவுக்கு, விற்பனை அதிகரித்ததால், 20 ஆண்டுகளுக்கு முன், 10 கிலோ மீட்டர் சுற்ற-ளவில் நடந்து வந்த சேலை உற்பத்தி, இன்று, 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விரிவடைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, இதற்கு போட்டியாக, விலை மலி-வான சூரத் சேலைகள் விற்பனைக்கு வந்தன. மிக குறைவான விலைக்கு தருவதால், இளம்பிள்ளையில் உள்ள மொத்த வியாபா-ரிகளில் பலரும், சூரத்தில் சேலைகளை வாங்கி, அவற்றை,'இளம்பிள்ளை சேலை' என விற்க தொடங்கினர்.இதில் பலரும் களம் இறங்கியுள்ளதால், இளம்பிள்ளையில், தற்-போது சூரத் சேலைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. இளம்பிள்ளையில் உற்பத்தி செய்யப்படும் சேலைகளின் விற்-பனை சரிந்ததால், உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து, உற்பத்தியை குறைத்துள்ளனர். இளம்பிள்ளை சிறு ஜவுளி உற்பத்-தியாளர் கே.ஆர். விஜய குமார்: இளம்பிள்ளையில், 1930ல் கைத்-தறி தொழில் சிறப்பாக இருந்தது. 1960ல் சாதா தறிகள் மூலம் சேலைகளை உற்பத்தி செய்து ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மாநி-லங்களுக்கு சேலை விற்பனைக்கு அனுப்பினர். 1992 முதல் தறித்-தொழில் வளர்ச்சி பெற்று, 1998 வரை மிக அபரிமிதமான வளர்ச்சி அடைந்தது. தறி சார்ந்த தொழிலாளர்களுக்கு அது பொற்காலமாக அமைந்தது. 2013ல் கணிசமான எண்ணிக்-கையில், சிறு சிறு முதலாளிகள் தொழிலுக்கு வந்தனர். கடந்த, 2016ல் சாதா எம்போஸ், காட்டன், செமி சில்க், புட்டா எம்போஸ், சாதா எம்போஸ், கல்யாண காட்டன் என இருப-துக்கும் மேற்பட்ட வகையான இளம்பிள்ளை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்பட பல்வேறு நகரங்கள், இந்தி-யாவின் பல மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்-பட்டன. இந்நிலையில், சூரத் சேலைகளின் வரவால் தொழில் முடங்கி உள்ளது.
கொசவபட்டியை சேர்ந்த சேலை உற்பத்தியாளர் எஸ்.ஞானசேகர்: கடந்த 2018ல், தறி ஓட்டுபவர்களுக்கு நுால் கொடுத்து சேலை தயாரிப்பு தொழில் செய்து வந்தேன். அப்போது ஒரு சேலைக்கு, 100 முதல், 200 ரூபாய் வரை லாபம் கிடைத்தது. 2021 வரை தறி தொழில் நன்றாக இருந்தது. 2022-ல் குபேரா பட்டு என சூரத் சேலை ரகம் வெளியானது. அந்த சேலைகளை இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள சில மொத்த ஜவுளி உற்பத்தியார்கள், 400 ரூபாய்க்கு வாங்கி, வாடிக்கையாளருக்கு, 1,200 ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அதனால் உற்சாகமான சூரத் வியாபாரிகள் சூரத் பிளைன், சூரத் ஆல்செல்ப் சூரத் குபேரா உள்ளிட்ட, 20 வகையான சேலை-களை, 200 முதல், 380 ரூபாய் வரை ஜவுளி உற்பத்தியாளர்க-ளுக்கு விற்பனை செய்தனர். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு இரு மடங்கு லாபத்திற்கு விற்பனை செய்தனர்.ஆனால், அதே ரகங்களை இளம்பிள்ளையில் உற்பத்தி செய்யும்-போது, 300 முதல், 1,500 ரூபாய் வரை உற்பத்தி செலவாகிறது. அதனால் இங்குள்ள சேலை வியாபாரிகளும், ஜவுளி உற்பத்தியார்-களும் சூரத்தில் வாங்கி இங்கு விற்பனை செய்வதை வாடிக்கை-யாக்கினர். இதனால் ஒரிஜினல் இளம்பிள்ளை ரகங்கள் விற்-பனை முடங்கியது. இதனால் இளம்பிள்ளை மட்டுமல்லாது, ராசிபுரம், நாமக்கல், ஜலகண்டாபுரம், மேட்டூர், நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலுார், தொப்பூர் பகுதிகளை சேர்ந்த, 5 லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இளம்பிள்ளை, கே.கே. நகரை சேர்ந்த ஆன்லைன் சேலை விற்ப-னையாளர் ஆர்.கோகுல்: கடந்த, 2019 முதல் ஆன்லைனில் சேலை வியாபாரம் செய்து வந்தேன். அந்த காலகட்டத்தில், 100 பேர் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தோம். அப்போது தினசரி, 100 இளம்பிள்ளை சேலைகளை பல மாநிலங்களுக்கு விற்று வந்தேன். இப்போது ஆன்லைன் தொழிலில், 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் தரமான சேலை என்பதால் அதிக ஆர்டர் குவிந்தது. தற்போது, ஒரிஜினல் இளம்பிள்ளை சேலை ரகத்தை காப்பி அடித்து, அதே மாடலில் தரம் குறைந்த, மலிவான மூலப் பொருட்களை கொண்டு உற்-பத்தி செய்யப்படும் சூரத் சேலைகளை, இங்குள்ள சில வியாபா-ரிகள் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு, 'ஒரிஜினல் இளம்பிள்ளை சேலை' என கூறி விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு கூறினர்.