/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதுக்கடைக்கு விவசாயிகள் எதிர்ப்பு 20க்குள் அகற்ற தாசில்தார் உறுதி
/
மதுக்கடைக்கு விவசாயிகள் எதிர்ப்பு 20க்குள் அகற்ற தாசில்தார் உறுதி
மதுக்கடைக்கு விவசாயிகள் எதிர்ப்பு 20க்குள் அகற்ற தாசில்தார் உறுதி
மதுக்கடைக்கு விவசாயிகள் எதிர்ப்பு 20க்குள் அகற்ற தாசில்தார் உறுதி
ADDED : செப் 05, 2024 03:02 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது இடத்தில், 'டாஸ்மாக்' கடை நடத்த, 2017ல் அனுமதி கொடுத்தார்.
அங்கு வரும், 'குடி'மகன்கள், காலி பாட்டில்களை, அருகே உள்ள தோட்டத்தில் வீசுகின்றனர். மேலும் ராஜேந்திரனின் தோட்டத்துக்கு செல்லும் பாதையை, 18 விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். அனைவரும், டாஸ்மாக் கடையை இடமாற்ற, இரு ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் விவசாயிகள், பாதையில் பள்ளம் தோண்டி, முட்செடிகளை போட்டு, கம்பி வேலி அமைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் டாஸ்மாக் கடையும் திறக்கப்படவில்லை.
தொடர்ந்துது கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர், போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது தாசில்தார், 'வரும், 20க்குள் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றப்படும்' என உறுதி அளித்தார். அதையேற்று விவசாயிகள் நேற்று, தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி, முட்செடி, வேலியை அகற்றிக்கொண்டனர். இதையடுத்து டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மேலும் வருவாய்த்துறையினர், 'சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாட்டில் உள்ளிட்ட கழிவை போடக்கூடாது' என, டாஸ்மாக் பணியாளர்களிடம் அறிவுறுத்தினர்.