/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'முதல்வரின் சாதனைகளை வீதி வீதியாக பிரசாரம் செய்ய வேண்டும்'
/
'முதல்வரின் சாதனைகளை வீதி வீதியாக பிரசாரம் செய்ய வேண்டும்'
'முதல்வரின் சாதனைகளை வீதி வீதியாக பிரசாரம் செய்ய வேண்டும்'
'முதல்வரின் சாதனைகளை வீதி வீதியாக பிரசாரம் செய்ய வேண்டும்'
ADDED : மார் 22, 2024 01:39 AM
வாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கொட்டவாடி பிரிவு சாலை அருகே, கள்ளக்குறிச்சி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார்.
அதில் வேட்பாளர் மலையரசனை அறிமுகப்படுத்தி, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசியதாவது: கடந்த முறை கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர், 3.99 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை தி.மு.க., வேட்பாளர், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தமிழக முதல்வரின் சாதனைகளை, வீதி வீதியாக, வீடு வீடாக, திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும். 'இண்டியா' கூட்டணியை துாக்கி பிடிப்பதில் தமிழக முதல்வர் முதலிடத்தில் உள்ளதோடு, கூட்டணி தலைவர்களை அரவணைத்து செல்வதில் தாய் உள்ளம் கொண்டவர். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் நேரு பேசுகையில், ''முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின் செயல்பாட்டை போன்று ஒவ்வொரு தொண்டரும் செயல்பட வேண்டும்,'' என்றார்.
சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளர் செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், 'இண்டியா' கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

