ADDED : மே 28, 2024 07:27 AM
சேலம்: சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் கடன் கொடுத்தவர்களின் டார்ச்சருக்கு பயந்து தொழிலாளி ஓட்டம் பிடித்துள்ளார்.
சேலம், சூரமங்கலம் அருகே ஜாகீர்அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன், 46. கூலித்தொழிலாளியான இவர், மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம், ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க, கடந்த, 24 காலை, 5:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பாமல் மாயமாகி விட்டார்.
இது குறித்து அவரின் மனைவி புஷ்பவள்ளி, 45, நேற்று முன்தினம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி கோகுல கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
மரப்பொருட்களை திருடியவர் கைது
கெங்கவல்லி: தனியார் கல்லுாரியில், மரப்பொருட்களை திருடிய வழக்கில், தலைமறைவாக இருந்தவர், ஓராண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
கெங்கவல்லி அருகே உள்ள, தம்மம்பட்டி தனியார் கல்லுாரியில் கடந்த, 2023, மே மாதம், கண்ணாடியில் உள்ள பீடிங், கதவுகள் திருட்டுபோனது. இவற்றை, சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் அருள்செல்வன், 42, என்பவர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஓராண்டாக தலைமறைவாக இருந்த, அருள்செல்வனை நேற்று போலீசார் கைது செய்தனர்.